அருள்மிகு சௌமிய நாராயணர் திருக்கோயில்
மூலவர்:சவுமியநாராயணர்
அம்மன்/தாயார்:திருமாமகள்
தீர்த்தம்:தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம்
புராண பெயர்:திருக்கோட்டியூர்
ஊர்:திருக்கோஷ்டியூர்
மாவட்டம்:சிவகங்கை
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
மங்களாசாசனம்
பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
கொம்பினார் பொழில்வாய்க் குயிலினம் கோவிந்தன் குணம்பாடு சீர் செம்பொனார் மதில்சூழ் செழுங்கனி யுடைத் திருக்கோட்டியூர் நம்பனை நரசிங்கனை நவின்றேத்து வார்களைக் கண்டக்கால் எம்பிரான்தன் சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வனே.
-பெரியாழ்வார்
திருவிழா:
மாசியில் தெப்பத்திருவிழா, வைகுண்டஏகாதசி, நவராத்திரி.
தல சிறப்பு:
மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது. ராமானுஜர் உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்த தலம்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 95 வது திவ்ய தேசம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்